பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காதது ஏன் ? - அமலா பால் விளக்கம்

amala paul explained why she did not act in ponniyin selvan

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கியுள்ளதால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில் அமலா பால், பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்று அதனை நிராகரித்துள்ளதாகவும் நடிக்காததற்காக வருந்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அமலாபால், "சில வருடங்களுக்கு முன் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக மணிரத்னம் என்னை அழைத்தார். நான் அவர் ரசிகை என்பதால் உற்சாகமாக ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஆனால், அப்போது அந்தப் படம் தொடங்கப்படவில்லை. இதனால் வருத்தமும், கவலையும் அடைந்தேன்.

பின்னர் 2021-ம் ஆண்டு அதே படத்துக்காக அவர் என்னை அழைத்தபோது எனக்கு நடிக்கும் மனநிலை இல்லை. அதனால் மறுத்துவிட்டேன். இதற்காக வருந்துகிறேனா? என்றால் இல்லை." என்று கூறியுள்ளார். மேலும் வாழ்க்கையில் சில விஷயங்கள் என்ன நடக்குமோ அது சரியாக நடக்கும் என்பது போல் பேசியுள்ளார் அமலா பால்.

Amala Paul manirathnam ponniyin selvan
இதையும் படியுங்கள்
Subscribe