தமிழ் சினிமாவில்பிரபலமானநடிகை அமலாபால். விஜயுடன் 'தலைவா', தனுஷுடன் 'வேலையில்லாப்பட்டதாரி', விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்' எனமுன்னணி கதாநாயர்களுடன் நடித்துள்ளார். 'ஆடை' படத்தில்உடையின்றி நடித்து பரபரப்பைக் கிளப்பினார்.
நடிகை அமலாபால், இயக்குனர் ஏ.எல். விஜயையைகாதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவர்களின்திருமணஉறவு நீண்டநாள் நீடிக்கவில்லை. இருவரும்விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு அமலா பால் படங்களில் நடிப்பதில் கவனம்செலுத்தி வந்தார்.
இந்த நிலையில், சிலமாதங்களுக்கு முன்புமும்பையைச் சேர்ந்தபாடகர்பவ்னிந்தர் சிங்,தனக்கும்அமலாபாலுக்கும்திருமணம் ஆகிவிட்டதாகக் கூறி சிலபடங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார். இதைத்தொடர்ந்து அமலா பால் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகக் கருதப்பட்டது. ஆனால், இதனைமறுத்தஅமலா பால்,தனக்குஇரண்டாவது திருமணம் ஆகவில்லை என்றார். அதைத்தொடர்ந்து, அந்தப படங்களைபாடகர்பவ்னிந்தர் சிங்தனதுசமூகவலைத்தள பக்கத்திலிருந்து நீக்கினார்.
இந்தநிலையில், சென்னைஉயர்நீதிமன்றத்தில், அமலாபால், பவ்னிந்தர் சிங்தன்னோடுஎடுத்தபுகைப்படங்களைவெளியிடத் தடைகோரியும், பவ்னிந்தர் சிங்மீது அவதூறு வழக்குத்தொடர அனுமதி கேட்டும்மனு ஒன்றைதாக்கல்செய்தார். அந்தமனுவில்அவர், தனக்கும்,அவருக்கும்திருமணம் ஆகிவிட்டதாகக் கூறிபவ்னிந்தர் சிங், அவரோடுதொழில் ரீதியாக எடுக்கப்பட்ட என்னுடையபுகைப்படத்தைவெளியிட்டுள்ளார். இது எனக்குமனஉளைச்சலைஏற்படுத்தியுள்ளது.
மேலும்,என்னைப பற்றிய தவறானஎண்ணத்தை உருவாக்குவதாகவும் உள்ளது. எனவே அந்தப புகைப்படங்களை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும்அவர் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும்கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்தநீதிமன்றம், பவ்னிந்தர் சிங்மீது வழக்குத் தொடர அமலாபாலுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது. இதையடுத்து விரைவில், அமலா பால், பவ்னிந்தர் சிங்மீது அவதூறு வழக்குத் தொடருவார்எனஎதிர்பார்க்கப்படுகிறது.