/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1734.jpg)
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் விஜய்யை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று விஜய்யும் - அமலாபாலும்பிரிந்தனர். அதன் பிறகு இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பணம் பறித்ததாக தனது ஆண் நண்பர் மீது நடிகை அமலாபால் புகார் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அமலா பாலுக்கு சொந்தமான வீட்டில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆண் நண்பர் பவீந்தர்சிங் என்பவர் அமலா பாலுக்குதொல்லை கொடுத்ததாகவும், மேலும் பணமோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி அமலா பாலின்மேலாளர் விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் விழுப்புரம் போலீசார் பவீந்தர்சிங்கை தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.புகாரில் பவீந்தர்சிங்குடன்சேர்த்துமேலும் 11 பேரின்பெயர்களும் இருப்பதால்போலீசார் அவர்களையும் தேடி வருவதாக கூறப்படுகிறது.
பவீந்தர் சிங் மீதுபண மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலியல் தொல்லை தொடர்பாகவும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)