amala paul baby showering photos

அமலா பால் தற்போது மலையாளத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பிரித்திவிராஜ் நடிப்பில் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை படம் பெற்று வருகிறது. இப்படத்தை தவிர்த்து தற்போது இரண்டு மலையாள படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

Advertisment

இதனிடையே கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். பின்பு 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த பாடகர் பவ்நிந்தர் சிங்குடன், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தகவல் வெளியானது. மேலும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையதளத்தில் வைரலானது. ஆனால் இதை அமலா பால் அந்த புகைப்படங்கள் வெறும் ஃபோட்டோஷூட் தான் என மறுத்துவிட்டார்.

Advertisment

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி அவரது பிறந்தநாளன்று அவரின் நண்பர் ஜகத் தேசாய் ப்ரபோசலுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி கேரளமாநிலம், கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜகத் தேசாயை அமலா பால் திருமணம் செய்துகொண்டார்.

திருமணமான நான்கே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால். அப்படி இருக்கும் நிலையில் கூட ஆடுஜீவிதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து கர்ப்பமானதை கணவருடன் பார்டி வைத்து கொண்டாடினார். அப்போது கணவருடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Advertisment

இந்த நிலையில் அமலா பாலுக்கு வளைகாப்பு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் நடந்த இந்த விழாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.