amala paul in adho antha paravai pola movie release date announced

அமலா பால், தற்போது 'விக்டிம்' என்ற ஆந்தாலஜி படத்திலும் 'கடாவர்' என்ற த்ரில்லர் படத்திலும் நடித்துள்ளார். இதில் 'விக்டிம்' திரைப்படம் நேற்று (05.08.2022) நேரடியாக ஓடிடி-யில் வெளியானது. 'கடாவர்' படம் வருகிற 12-ஆம் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளது. இதனிடையே அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் இருந்தும் கூட வெளியாகவில்லை. சமீபத்தில் கூட கோடையில் இப்படம் வெளியாகும் என படக்குழுவிடம் இருந்தது அறிவிப்பு வந்தது. ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="473c3e15-ba1f-4220-b1ec-1d23766e9acd" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_26.jpg" />

Advertisment

இந்நிலையில் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பாக, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டீசர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.