Advertisment

"எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லை" - அமலா பால் 

hrhsdhdsh

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவரும் நடிகை அமலாபால், தற்போது தெலுங்கில்‘குடி யடமைத்தே’ எனும் வெப் தொடரில் நடித்துள்ளார். அமலா பால் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படம் இன்று (16.07.2021) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ராம் விக்னேஷ் இயக்கியுள்ள இத்தொடரில் அமலாபாலுடன் இணைந்து ஈஸ்வர் ரச்சிராஜு, ப்ரதீப் ருத்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த தொடர் குறித்த ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த அமலா பால், தன் சினிமா வாழ்க்கை குறித்து பேசும்போது....

Advertisment

"எனக்கு பதினேழு வயது இருக்கும்போது திரைத்துறைக்குள் வந்தேன். என் தனிப்பட்ட வாழ்வில் நான் கடந்துவந்த விஷயங்கள் அனைத்தும் என் திரை வாழ்விலும் பிரதிபலித்தன. அதேபோல சினிமா வாழ்வில் சந்தித்த விஷயங்கள் என் சொந்த வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்றன. அவை இரண்டையும் பிரிக்கும் கலை எனக்குத் தெரியவில்லை. என் அப்பாவின் மரணத்தை நான் எதிர்கொண்டபோது, அது எனக்கு உண்மையில் ஒரு சுயபரிசோதனை காலகட்டமாகவே இருந்தது. அப்போது நான் ஒரு திறந்த புத்தகமாக உணர்ந்தேன். எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லை என்று உணர்ந்தேன். நான் செய்த விஷயங்களைத் தாண்டி என் வாழ்க்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதைப் போல உணர்ந்தேன். தற்போது என் சினிமா வாழ்க்கையிலிருந்து என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பிரிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அந்தக் கலையை நான் கற்றுக்கொள்ள இன்னமும் முயற்சி செய்துவருகிறேன்" என கூறியுள்ளார்.

Advertisment

Amala Paul amalapaul
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe