Skip to main content

லியோனியின் உறவினர் என்பதால் திமுகவை கலாய்க்கவில்லையா? - உங்கள் கேள்விகளுக்கு 'தமிழ்ப்படம்' சி.எஸ்.அமுதனின் பதில்கள்!

Published on 23/07/2018 | Edited on 23/07/2018

தமிழ்ப்படம் 2-ன் இயக்குநர் சி.எஸ்.அமுதனிடன் என்ன கேள்விகள் கேட்கலாம் என ஃபேஸ்புக் வாயிலாக கேட்டிருந்தோம். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கு சி.எஸ்.அமுதனின் பதில்கள்...
 

csamudhan



ஸ்ரீரெட்டி பற்றி ஏன் படத்தில் சொல்லவில்லை?

ஹா..ஹா..ஹா.. நீங்கள் சொல்றவங்க எல்லாத்தையுமா படத்துல சேர்க்கமுடியும்? என்கிட்ட கண்டெண்ட் 10.30 மணிநேரத்திற்கு இருக்கு. ஆனால் ஒரு படத்திற்கான அதிகபட்ச நேரம் என்பது இரண்டு அல்லது இரண்டரை மணிநேரம்தான். அதனால் தேர்ந்தெடுத்துதான பண்ணமுடியும்.

மேக் இன் இந்தியா பற்றி ஒரு படம் எடுப்பீர்களா?

கண்டிப்பாக பண்ணலாம்.

தமிழ்நாட்டில் நடந்த விஷயங்களை படத்தில் காண்பித்தீர்கள், அப்படியே எதிர்காலத்தில் தமிழ்நாடு எப்படி இருக்கும் என்பதையும் கூறியிருக்கலாமே?

அது என் வேலை இல்லையே... சொல்லவேண்டுமென்றால் சொல்லலாம். ஆனால் படத்தின் களம் அது இல்லையே... ஸ்பூஃப் என்ற களத்தில் ஓரளவிற்குதான் கருத்து சொல்ல முடியும். படத்தில் எவ்வளவு சொல்ல முடிந்ததோ அவ்வளவு சொல்லியிருக்கிறோம்.

 

tamilpadam2



கருத்தை மட்டும் கூறும் படங்கள் உங்களுக்கு விருப்பமா?

கருத்தை மட்டும் கூறினால் அந்தப்படம் எனக்கு மட்டுமில்லை யாருக்குமே விருப்பமிருக்காது. 'அது எங்களுக்குத் தெரியும், நீங்க அதை சொல்லாதீங்க' என்று சொல்லிவிடுவார்கள். படத்தில் ஓரளவிற்கு கருத்து கூறலாம். கருத்து மட்டுமே படமாக இருந்தால், எனக்குத் தெரிந்து யாரும் விரும்பமாட்டார்கள். இது என்னுடைய கருத்து.

 

 


தமிழ்ப்படம் 3-ல் இன்னும் அனைவரையும் கலாயுங்கள். இதுதான் எங்கள் வேண்டுகோள்...

கண்டிப்பா... செஞ்சுடலாம்!!! 

தமிழ் ராக்கர்ஸ்க்கு உங்கள் படத்தைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நான் அவுங்களுக்கு என்ன சொல்ல முடியும்? அவுங்கதான் எனக்கு எதாவது சொல்லணும், நல்ல பிரிண்ட் எதும் வச்சுருக்காங்களா... என்ன, எப்படினு...

நீங்க அட்லிக்கே டஃப் கொடுக்குறீங்களே சார்?

எந்த விதத்துல... (தெரியாதது போல சிரிக்கிறார்) 

தமிழ்ப்படம் 3 எப்போ எடுப்பீங்க?

இன்னும் இரண்டு, மூன்று வருடங்களுக்குக் கிடையாது.

 

amudhan reaction



ஒரு படத்தை கேலி செய்வதால் அவர்கள் அறிவாளி என்று அர்த்தமில்லை. அது பலரின் உழைப்பு. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

இதை சொல்றவங்களுக்கு சினிமா என்றால் என்னவென்றே தெரியாது என்றுதான் நினைக்கிறேன். அப்படிப்பட்டவங்கதான் இப்படி சொல்வார்கள். ஸ்பூஃப் என்பதும் ஒரு திரைப்பட வகை. அதை செய்யவும் உழைப்பு தேவை, சும்மால்லாம் எடுத்துற முடியாது.

உங்களுடைய இரண்டாவது படத்தை எப்போது ரிலீஸ் செய்வீர்கள்?

ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர்கள் எனக்குக்  கூறியிருக்கிறார்கள். பார்ப்போம்...

 

 

படத்தில் திமுகவை விட அதிமுகவை அதிகமாக கலாய்த்திருக்கிறீர்கள்?

ஓ.கே. இதற்கு வேறென்ன சொல்வது?

தமிழ் சினிமாவிலிருப்பவர்கள் நீங்கள் கொடுத்த பதிலடியில் திருந்திவிடுவார்களா?

திருத்துவது நம்ம வேலை இல்லை. எல்லாரையும் ஜாலியாக சிரிக்க வைப்பதுதான் நம்ம வேலை.

நீங்க எப்போ இங்கிலிஷ் படம் எடுப்பீர்கள்?

என்னோட தயாரிப்பாளர்கள்கிட்ட கேட்டு சொல்றேன்.

நீங்க திண்டுக்கல் ஐ.லியோனியோட மருமகன். அதனால்தான் திமுகவை அதிகம் கலாய்க்கவில்லை என்கிறார்களே? 

பெர்சனல் விஷயங்களைப் பற்றி கேட்க வேண்டாம், ப்ளீஸ். (உறுதியாக மறுத்துவிட்டார்)




 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மையைச் சொன்ன நக்கீரன் கோபாலை கைது செய்வதா? இந்த ஆட்சி அழிவு பாதைக்கு செல்கிறது! திண்டுக்கல் லியோனி கடும் கண்டனம்!!

Published on 09/10/2018 | Edited on 09/10/2018
leo

  

 நக்கீரன் ஆசிரியர் கைது குறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல பட்டிமன்ற நடுவரும், தி.மு.க.வின் முக்கிய வி.ஐ.பி.யுமான திண்டுக்கல் ஐ.லியோனி,    ’’அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியர் நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் வாட்சப் மூலம் அவதூறாக பேசியதின் மூலம் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இப்படி கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி கவர்னருடன் நேரடியாக தொடர்பு இருப்பதாகவும், அவரே கவர்னரின் பெயரை உச்சரித்து இருக்கிறார். இது பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும். அது உண்மையும் கூட. அப்படி அந்த உண்மையை பத்திரிக்கை வாயிலாக நக்கீரன் ஆசிரியர் கோபால் செய்தி வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.   அப்படி உண்மை செய்தியை வெளியிட்ட ஆசிரியரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். அந்த அம்மா ஆட்சியில் கூட வழக்குப் பதிவு செய்து விட்டுத்தான் கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த எடப்பாடி ஆட்சியில் வழக்கே போடாமல் கைது செய்திருப்பதை பார்த்தால் அந்த அம்மாவையே எடப்பாடி மிஞ்சிவிட்டார். இப்படிப்பட்ட ஆட்சி அழிவு பாதைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறது. 

 

அ.தி.மு.க. ஆட்சி வரும்போதெல்லாம் கருத்து சுதந்திரத்திற்கு பெரும் நெருக்கடி தான் இருந்து வருகிறது. அதையெல்லாம் நக்கீரன் ஆசிரியர் கோபால் உடைத்து எரிந்து கொண்டு தான் வருகிறார். இது ஒன்னும் நக்கீரன் கோபாலுக்கு பெரிய விசயம் இல்லை. இருந்தாலும் மேடையில் பேசுவது பத்திரிக்கையில் எழுதுவதும் கலை நிகழ்ச்சிகளில் பாட்டு மூலம் சொல்வதும் இப்படி பல முனைகளில் பத்திரிக்கையாளர்களும், ஊடகங்களுக்கும் பெரும் தாக்குதலை தந்து வருவதால் மக்கள் மத்தியில் எந்த ஒரு விமர்சனமும் சொல்லக் கூடாது என்கிறார்கள். அப்படி ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சி அழிவுப் பாதைக்கு தான் கொண்டு செல்லும். கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட எந்த ஒரு நாட்டிலும் அந்த ஆட்சியை மக்கள் தூக்கி எரிந்து விடுவார்கள். அப்படிப்பட்ட நிலைதான் தற்போது இருந்து வருகிறது. இந்த ஆட்சியையும் மக்கள் கூடியவிரைவில் தூக்கி எரிய போகிறார்கள்!’’என்றார்.

 

Next Story

பெரியார் அண்ணா, கலைஞரால் வளர்க்கப்பட்ட திமுக என்பது ஆலமரம் போன்றது! திண்டுக்கல் லியோனி பேச்சு

Published on 25/03/2018 | Edited on 25/03/2018
leone


தமிழகத்தின் இருண்ட ஆட்சி என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது,

தமிழகத்தில் ஆட்சி ஒன்று இருந்தால் தானே வெளிச்சமும், இருட்டும் இருப்பது தெரியும். கடந்த ஒரு ஆண்டாக முதல்வரும், துணை முதல்வரும் இருண்ட முகத்துடன், பயந்து போய் இருக்கிறார்கள். எத்தனை நாள், மாதம் இப்படி பயந்து போய் அமர்ந்திருப்பார்கள் என்று தான் தெரியவில்லை. இவ்வாறு உள்ளவர்களால் நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்து விட முடியும். எந்த நேரத்தில் ஆட்சி கவிழும் என்று அவர்களுக்கே தெரியாது. இன்னும் சிறிதுகாலம் மட்டுமே நீடிக்க உள்ள இந்த கேவலமான ஆட்சி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரும்.

பல நெருக்கடிக்கு மத்தியில் அனைத்து மாவட்டத்திலும் கள இயக்கம் நடத்தி கட்சியை வலுப்படுத்தி வருபவர் மு.க.ஸ்டாலின். திமுக மேடையில் தான் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் களை கட்டும்.

பொடி போடும் இடைவெளியிலும், திராவிடர்களுக்காக பேசியது அண்ணாவின் குரல். ஒரே ஒரு வார்த்தையான என் இனிய உடன்பிறப்புகளே என்று கூறும் ஒரு குரலுக்கு லட்சோப லட்சம் கைத்தட்டல்கள் பறக்கும். அண்ணாவின் குரலும், கலைஞரின் குரலும் கலந்து பேசும் மு.க.ஸ்டாலினின் குரல் தான் நாளைய முதல்வரின் குரல். திராவிட பாரம்பரியம் மாறாத குரலாக விளங்கி வருவது மு.க.ஸ்டாலினின் குரல்.

ரஜினி, கமல் போன்ற எந்த நடிகர்கள் கட்சி துவங்கினாலும் அவர்களால் எதுவும் சாதிக்க முடியாது. மண்டபத்தில் ரசிகர்களை அழைத்து, உங்க உங்க வேலைய பாருங்க; நான் என் வேலைய பார்க்கிறேன். 234 தொகுதியிலும் போட்டியிடுவோம், என்று ரஜினி கூறுகிறார். இது ஒரு கட்சியா?

அண்ணா, முதன்முதலாக தேர்தலில் போட்டியிடுவதற்கே 2 பெட்டி வைத்து மக்கள் கருத்துக்களையும், கட்சியினரின் கருத்துக்களையும் கேட்டு தான் தேர்தலில் போட்டியிட்டார். விஜயகாந்த் கட்சி இன்று காணாமல் போய் விட்டது. எத்தனையோ பேர் கட்சி துவங்கி வீணாகி விட்டார்கள். நடிகர்கள் துவங்கும் கட்சி என்பது நேற்று பெய்த மழையில் முளைத்த கற்றாழை போன்றது. பெரியார் அண்ணா, கலைஞரால் வளர்க்கப்பட்ட திமுக என்பது ஆலமரம் போன்றது. மக்களுக்கு நிழல் தருவது. இவ்வாறு லியோனி பேசினார்.