Advertisment

நடிகருடன் ஆலியா மானசாவுக்கு திடீர் திருமணம்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் தொடங்கி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலின் ஹீரோயின் ஆலியா மானசாவுக்காகவே பலரும் இந்த சீரியலை பார்த்து வருகிறார்கள். இளைஞர்களும் சீரியல் பார்க்கத் தொடங்கியதே இந்த காலக்கட்டத்தில் என்று சொன்னால் அது மிகையாகது. இந்த சீரியலின் மற்றொரு தூண் என்றால் அது சஞ்சீவ் தான். மானசாவிற்கும், சஞசீவிற்கும் இருந்த கெமிஸ்ட்ரி அவர்கள் நிஜ காதல் ஜோடியோ என்ற சந்தேகத்தை தரும் அளவிற்கு இருந்தது.

Advertisment

vgj

அந்த சந்தேகத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக விருது அளிக்கும் விழா ஒன்றில் கலந்துக்கொண்டு தங்களின் காதலை இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் இவர்கள் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.இவர்கள் ரீல் ஜோடியில் இருந்து, ரியல் ஜோடியாக மாறிவிட்டனர் என்பதுதான் அந்த தகவல். ராஜா ராணி சீரியல் முடிந்த கையோடு, இவர்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.இதனையறிந்த ஆல்யாவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆனால் இதுதொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அவர்கள் தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe