Advertisment

அல்போன்ஸ்புத்திரன் எடுத்த அதிரடி முடிவு

alphonse puthren shut down social media

பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், கோல்டு படத்தை தொடர்ந்து 'கிஃப்ட்' என்ற தலைப்பில் இளையராஜா இசையில் ஒரு படம் இயக்கி வந்தார். டான்ஸ் மாஸ்டர் சாண்டி இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ராகுல் தயாரித்து வந்த இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. ஆனால் சமீபத்தில் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதாக தெரிவித்து சினிமா தியேட்டர் கரியரை நிறுத்துவதாக தெரிவித்தார். இருப்பினும் குறும்படங்கள், ஆல்பம் பாடல்கள் என பெரும்பாலும் ஓடிடிக்கு ஏற்றவாறு இயக்குவதாக கூறியிருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

Advertisment

இதனிடையே தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ச்சியாக நிறைய பதிவுகளை பகிர்ந்து வருவார். அதில் சில பதிவுகள் பலரது கவனத்தை பெற்று வைரலானது. இந்த நிலையில் இனிமேல் சமூக வலைதளங்களில் எது குறித்தும் பதிவிட போவதில்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “நான் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது, எனது அம்மா, அப்பா மற்றும் சகோதரிகளுக்குப் பிடிக்கவில்லை. சில உறவினர்கள் அவர்களைப் பயமுறுத்துகிறார்கள். அதனால் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பதிவிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். நான் அமைதியாக இருந்தால் அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும் என்கிறார்கள். அதனால் அப்படியே ஆகட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe