Alphonse Puthren

Advertisment

தமிழ்த்திரையுலகின் உச்சநட்சத்திரமான ரஜினிகாந்த், அவரது அரசியல் வருகை குறித்து நேற்று உறுதிப்படுத்தினார். மாவட்ட நிர்வாகிகளுடன் முன்னர் ஆலோசனை நடத்தியிருந்த ரஜினிகாந்த், அதனைத்தொடர்ந்து ஜனவரியில் கட்சி தொடங்க இருப்பதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31ல் அறிவிப்பதாகவும் கூறினார். இதனையடுத்து, திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், நேரம் மற்றும் பிரேமம் திரைப்படத்தின் இயக்குனரான அல்போன்ஸ் புத்திரன் ரஜினிக்கு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அந்தப்பதிவிற்கு கீழே ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் மாற்றுக்கருத்து கொண்டஒரு தரப்பினர் தங்களது அதிருப்தியான கருத்துகளை வெளிப்படுத்த, இறுதியில் அல்போன்ஸ் புத்திரனுக்கும் அவர்களுக்கும் இடையே காரசார விவாதமானது.

அதில் ஒரு ரசிகர், "ரஜினி பாஜகவின் வேறு ஒரு வடிவமே. உங்களது பதிவிலேயே இதுதான் தரம் குறைந்த மற்றும் வீணான பதிவு" எனப் பதிவிட்டார். அதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன், 'யார் வீணாகிறார்கள் என்று பார்ப்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment

ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்றுப் பதிவிட்ட அல்போன்ஸ் புத்திரனுக்கு ரஜினி ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.