Advertisment

அல்போன்ஸ் புத்திரன் படத்துக்கு இளையராஜா இசை

alphonse puthren new movie music director is ilaiyaraja

Advertisment

நேரம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய பிரேமம் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாராவை வைத்து 'கோல்ட்' படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்படம் வெளியானது. இப்போது தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில் ஒரு படம் இயக்கவுள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனது அடித்த பட அப்டேட்டை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சில நாட்களுக்கு முன் 'தமிழ் இசை ராஜா' மேஸ்ட்ரோ இளையராஜாவை மூன்றாவது முறையாக சந்தித்தேன். இந்த முறை நான் புகைப்படம் எடுக்க மறக்கவில்லை. அவரைப் பற்றி நான் விளக்க வேண்டியதில்லை. ரோமியோ பிக்சர்ஸுடன் நான் இயக்கும் படத்திற்குப் பிறகு, மேஸ்ட்ரோ இளையராஜா சாருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. மேலும் இப்படம் குறித்து எந்தஒரு அப்டேட்டும் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படம் அல்லாது தனது அடுத்த படத்தில் இசையமைப்பாளராக இளையராஜாவை சந்தித்து ஓகே வாங்கியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

Advertisment

Ilaiyaraaja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe