Alphonse​​ Puthren meet kamal photos goes viral

நேரம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய பிரேமம் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாராவை வைத்து 'கோல்ட்' படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

Advertisment

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருக்கும் அல்போன்ஸ் புத்திரன், சமீபத்தில் கமல்ஹாசனை பற்றி, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கும் ஒரு வேண்டுகோள். சினிமாவுக்கு என்று ஒரு தனித்துறையை உருவாக்கி அல்லது அறிமுகப்படுத்தி அதற்கு கமல்ஹாசனை அமைச்சராக நியமிக்கவும்" எனக் கோரிக்கை வைத்து ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், கமல்ஹாசனைமுதல் முறையாக நேரில் சந்தித்துள்ளதாகத்தெரிவித்து அவருடன் எடுத்துக்கொண்டபுகைப்படத்தை தற்போதுஅல்போன்ஸ் புத்திரன்வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் பின்புறத்தில் கமல் படங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'மருதநாயகம்' படத்தின் போஸ்டர் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அல்போன்ஸ் புத்திரன் தனது பதிவில், "சினிமாவின்மவுண்ட் எவரெஸ்ட் கமல்ஹாசன் சாரை என் வாழ்வில் முதல் முறையாகச் சந்தித்தேன். அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டேன். பின்பு அவர் சொன்ன5, 6 சின்ன கதையை என் டைரியில் எழுதிக்கொண்டேன்.ஒரு மாஸ்டராக அவர் பகிர்ந்துகொண்ட அனுபவங்களை ஒரு மாணவனாக நான் கேட்டுக்கொண்டேன். அப்போது ஏதேனும் அவர் பகிர்ந்த தகவலைமிஸ் செய்துவிடுவேனோஎன்று பயந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.