Alphonse Puthren about ajith

Advertisment

நேரம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய பிரேமம் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாராவை வைத்து 'கோல்ட்' படத்தை இயக்கினார். கடந்த மாதம் இப்படம் வெளியானது.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருக்கும் அல்போன்ஸ் புத்திரன், சினிமா சார்ந்து பல விஷயங்களைபகிர்ந்து வருகிறார்.சமீபத்தில் சினிமாவுக்கென்று ஒரு துறையை உருவாக்கி அதில் கமல்ஹாசனை அமைச்சராக்க முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். பின்பு கமலை நேரில் சந்தித்த அனுபவங்களைபகிர்ந்திருந்தார். இந்த இரண்டு பதிவுகளும் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், அஜித்தோடஒரு படம் பண்ணுங்க என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், "அஜித் சாரை இதுவரைக்கும் மீட் பண்ண முடியல. நிவின் ஒருமுறை அஜித் சாருக்கு பிரேமம் படம் பிடித்துள்ளதாகவும், அதில் வர காலேஜ் இண்ட்ரோ மற்றும் களிப்பு பாட்டு அவருக்கு பிடிச்சிருக்குன்னும்சொன்னார். பின்பு, நான் ஒரு 10 முறை அவரின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் அஜித் சாரை சந்திக்க வேண்டி கேட்டிருப்பேன். இப்ப 8 வருஷம் ஆச்சு. இன்னும் சந்திக்க முடியலை.

Advertisment

எனக்கு வயதாவதற்குள்ளாக அஜித் சாரை பார்த்தால் படம் பண்ணுவேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்தக் கேள்வியை கேட்கும்போது எனக்கு எவ்வளவு வலிக்கும். நானும்பலமுறை முயற்சி செய்து சோர்வடைந்து விட்டேன். நீங்கள் கேட்கும்போது முதலில் கோபம் வரும். பின்னர் நீங்களும் என்னை மாதிரி ஒரு ஏ.கே ரசிகரென நினைத்து அமைதியாக கடந்து விடுவேன். ஏ.கே சாரை வைத்து படம் எடுத்தால் ஹாலிவுட், கோலிவுட் திரையரங்குகளில் படம் 100 நாள் ஓடும். அதே மாதிரிதான் உலகநாயகன், சூப்பர் ஸ்டார், தளபதியுடனும்” எனக் கூறியுள்ளார்.