/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vj_5.jpg)
நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, அல்லு சிரிஷ் ஆகியோர் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகராக இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில்ஆக்டிவாக இருக்கும் இவர்கள் அவ்வப்போது ட்ரெண்டுக்குஏற்றார் போல் உடைகள் அணிந்து போட்டோஷூட் நடத்துவது வழக்கம்.
அந்த வகையில்தற்போது இவர்கள் மூவரும் திருமண உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். கண்கவரும் ஷர்வானி உடையில் வெளியான துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, அல்லு சிரிஷ் ஆகியோரின்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தேவரகொண்டா இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் 'லைகர்' படத்தில் பிரபல குத்துச்சண்டைவீரர் மைக் டைசனுடன்நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)