Skip to main content

அல்லு அர்ஜுனின் புகைப்படம் இணையத்தில் வைரல்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
allu arjun Wax Statue at dubai

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், 'புஷ்பா’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். மேலும் உலக அளவில் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி விரைவில் திரைக்கு வருகிறது. இதை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அல்லு அர்ஜுனுக்கு துபாயில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. அச்சிலை புஷ்பா படத்தில் அவர் செய்யும் போஸ் ஒன்றை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள இந்த சிலையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றுள்ளது. நேற்றைய தினம் அல்லு அர்ஜுன் ஹீரோவாக அறிமுகமாகி 21 ஆண்டுகள் கடந்துள்ளன.

இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், மெழுகு சிலை அருகில் அதே போஸுடன் அதே ஆடையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனில்லை” - அல்லு அர்ஜுன் 

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
allu arjun about his political stand

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று (13.05.2024) நடைபெற்று வருகிறது. 

அதன்படி ஆந்திரா - 25 தொகுதிகளுக்கும், தெலங்கானா - 17 தொகுதிகளுக்கும், பீகார் - 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் - 4 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசம் - 8 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா - 11 தொகுதிகளுக்கும், ஒடிசா - 4 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசம் - 13 தொகுதிகளுக்கும், மேற்குவங்கம் - 8 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீர் 1 தொகுதிக்கும் என 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 28 பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் திரைப் பிரபலங்கள் சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், மஞ்சு மனோஜ், நாகச் சைத்தன்யா, ஸ்ரீகாந்த், கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ், இயக்குநர் ராஜமௌலி, மனைவி ரமா ராஜமௌலி, கல்யாண் ராம் உள்ளிட்ட பலர் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். பின்பு செய்தியாளர்களிடம் அனைவரும் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டனர். 

allu arjun about his political stand

அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனில்லை. எனக்கு நெருக்கமானவர்களுக்கு கட்சி வேறுபாடின்றி ஆதரவளிப்பேன். ரவீந்திர கிஷோர் ரெட்டி எனது நண்பர் என்பதால் மட்டுமே ஆதரித்தேன்” என்றார். சமீபத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ரவீந்திர கிஷோர் ரெட்டிக்கு அவரது வீட்டில் வாக்கு சேகரித்தார். அதே போல் மற்றொரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அவரது மாமாவும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணுக்கும் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வாக்கு சேகரித்த அல்லு அர்ஜுன் - ஆந்திர அரசியலில் பரபரப்பு 

Published on 11/05/2024 | Edited on 11/05/2024
Allu Arjun in campaign excitement in Andhra politics

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்கு பதிவு, மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஒவ்வொரு கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை மூன்று கட்ட வாக்குபதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் நடைபெற்ற நிலையில் கடந்த 7அம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், என மொத்தம் 12 மாநிலங்களில் 94 தொகுதிகளுக்கு நடந்தது. 

இதையடுத்து நான்காம் கட்ட வாக்குபதிவு மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதியும், ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும், ஏழாம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதியும் அடுத்தடுத்து நடக்கவிருக்கிறது. ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆந்திராவில் நாடாளுமன்றத்துக்கான நான்காம் கட்டத் தேர்தல் வருகிற 13 ஆம் தேதி (13.05.2024) நடக்கிறது. இந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்தோடு சேர்த்து ஆந்திர சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன், திடீரென ஆந்திரா நந்தியாலா சட்டமன்றத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர கிஷோர் ரெட்டியின் வீட்டிற்கு வருகை தந்தார். இதனால் அப்பகுதியில் அயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டிருந்தனர். 

Allu Arjun in campaign excitement in Andhra politics

பின்பு ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு, ரவீந்திர கிஷோர் ரெட்டியின் கையை உயர்த்தி காண்பித்து அங்கு வந்திருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். இது தற்போது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரப்பாக பேசப்பட்டு வருகிறது. அல்லு அர்ஜுனின் மாமாவும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், பித்தாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கும் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.