allu arjun

Advertisment

கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியது. அரசு விதித்த ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கரோனா பரவல் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதிலும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அல்லு அர்ஜுன், "எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடைய வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட நான், அனைத்து வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள். வீட்டிலேயே இருந்து பாதுகாப்பாக இருங்கள். வாய்ப்பு கிடைக்கும்போது தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள். நான் நலமாக உள்ளேன். என்னுடைய ரசிகர்கள் மற்றும் நலம்விரும்பிகள் யாரும் என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.