allu arjun

Advertisment

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் உட்பட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கடந்த சில நாட்களாக தொற்றிலிருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கடந்த மாதத்தின் இறுதியில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட அல்லு அர்ஜுன், உரிய சிகிச்சை எடுத்துவந்தார். தற்போது 15 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, கரோனா தொற்றில் இருந்து மீண்டஅல்லு அர்ஜுன் பூரண குணமடைந்துள்ளார். இத்தகவலை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.