Advertisment

தமிழ் உட்பட 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் அல்லு அர்ஜுன் படம்! ஃபர்ஸ்ட் லுக் உள்ளே!

கரோனா தொற்று காரணமாகநாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் கொரோனா வைரஸ் நிவாரணத் தொகையாக ரூபாய் 1.25 கோடியை மத்திய மாநில அரசுகளுக்கும், கொரோனா வைரஸ் பரவலால் வேலை இழந்து வாடும் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 25 லட்சமும் சமீபத்தில் வழங்கினார்.

Advertisment

vsv

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் “புஷ்பா” படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தை 'ஆர்யா' மற்றும் 'ஆர்யா-2' என இரு வெற்றிப் படங்களை அல்லு அர்ஜுனுக்கு கொடுத்த சுகுமார் இயக்கவுள்ளார்.ஶ்ரீமந்துடு, ஜனதா கேரஜ், ரங்கஸ்தலம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பாக நவீன், ரவி பிரமாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கவுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் தமிழ்ப் படமாக இது அமைந்துள்ளது.

allu arjun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe