Advertisment

‘புஷ்பா 2’ படத்தின் ஓ.டி.டி. அப்டேட்

allu arjun pushpa 2 ott update

'புஷ்பா' பட வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமான புஷ்பா 2 - தி ரூல் படம் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியாகியிருந்தது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

Advertisment

இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது அல்லு அர்ஜூன் திரையரங்கிற்கு சென்றதால் அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகனும் அடிப்பட்டு மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவடைந்தார். இப்போது கோமாவில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க இப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.1831 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

Advertisment

இதையடுத்து படத்தில் 20 நிமிட காட்சிகள் இணைக்கப்பட்டு ரீ லோடட் வெர்ஷன் என்ற பெயரில் மொத்தம் 3.30 நிமிடங்களுக்கு மேளாக திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் ரீ லோடட் வெர்ஷன் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் வருகிற 30ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

director sukumar allu arjun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe