'புஷ்பா' படக்குழுவினருக்கு தங்க நாணயம் பரிசளித்த அல்லு அர்ஜுன்

allu arjun presents gold coin to pushpa movie team

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பைஅதிகரித்துள்ளது.'புஷ்பா' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="eba24627-bc5f-4aba-a11a-f660fb32b18b" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_33.jpg" />

இந்நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் தங்க நாணயம் பரிசளித்துள்ளார். புஷ்பா படக்குழுவின் கடின உழைப்பால் ஈர்க்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் அதில் பணியாற்றிய முக்கியமான 40 நபர்களுக்கு ஒரு துலாம் (11.66 கிராம்) தங்க நாணயத்தை பரிசளித்துள்ளார். அத்துடன் அனைத்து தயாரிப்பு பணியாளர்களுக்கும் ரூ 10 லட்சம் ரொக்க பரிசு வழங்கியுள்ளார்.

சந்தன மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலர்சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் யூடியூப் தளத்தில் இந்த ட்ரைலர்3.8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

allu arjun pushpa
இதையும் படியுங்கள்
Subscribe