Advertisment

"உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் தம்பி" - அல்லு அர்ஜூன் பாராட்டு!

bfdsbfsbs

அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல் 'விலாத்தி ஷராப்' யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், அவரது அண்ணன் அல்லு அர்ஜூன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜூனின் இளைய சகோதரர் அல்லு சிரிஷ். இவர் அண்மையில் முதன்முறையாக இந்தி மொழியில் சிங்கிள் ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டார். 'விலாத்தி ஷராப்' (Vilayati Sharaab) என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பாடல், குறுகிய காலத்தில் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று ட்ரெண்டாகி வரும் நிலையில், தனது சகோதரர் சிரிஷை சமூக வலைதளத்தில் பாராட்டியுள்ளார் நடிகர் அல்லு அர்ஜூன். அதில்...

Advertisment

"யூடிபில் 100 மில்லியன் பார்வைகளைத் தொட்டதற்கு மிகப்பெரிய வாழ்த்துகள். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இசை ரசிகர்கள் அனைவருக்குமே நன்றி. இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்களின் அன்பை 'விலாத்தி ஷராப்' பாடலில் பொழிந்து அதனை மாபெரும் வெற்றியாக்கியுள்ளீர்கள். 100 மில்லியன் பார்வைகளைக் கடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. தர்ஷன் ராவல், நீதி மோகன், ஹெலி தருவாலா மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்" என கூறியுள்ளார். நடிகர் அல்லு சிரிஷ், தமிழில் ‘கவுரவம்’படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

allu arjun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe