Advertisment

ரஜினி, விஜய் வரிசையில் இணைந்த அல்லு அர்ஜுன்

Allu Arjun paid rs125 crore for Pushpa 2 movie

Advertisment

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'புஷ்பா 2' படத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் நடிப்பதற்கு நடிகர்அல்லு அர்ஜுனுக்கு படக்குழு ரூ.125 கோடி சம்பளம் பேசியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புஷ்பா படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளதால் அல்லு அர்ஜுனுக்கு இந்த சம்பளம் கொடுத்துள்ளதாகவும் பேசப்படுகிறது. இதன் மூலம் இந்திய சினிமாவில் ரஜினி, விஜய்,, சல்மான் கான், அமீர் கான் உள்ளிட்ட ஒரு சில முன்னணி நடிகர்களின் பட்டியலில் தற்போது அல்லு அர்ஜுனும்இணைந்துள்ளார். இதனிடையே அல்லு அர்ஜுன் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைசமீபத்தில் நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

rashmika mandana allu arjun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe