allu arjun

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் 'அலா வைகுந்தபுரமலோ' ஹிட்டை தொடர்ந்து இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலால் படத்தின் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடிக்கப்போகும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜூனின் 21வது படத்தை கொரட்டலா சிவா இயக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரட்டலா சிவா தற்போது சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா படத்தை இயக்கி வருகிறார்.

Advertisment

'புஷ்பா' படத்தை முடித்துவிட்டு, கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் அல்லு அர்ஜுன். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளன.