Advertisment

ரசிகரின் நிலைமையை அறிந்து உதவி செய்த அல்லு அர்ஜுன்

Allu Arjun helped to fans father treatment

இந்திய அளவில் கவனிக்கப்படும் ஹீரோவாக இருக்கும் அல்லு அர்ஜுன், 'புஷ்பா' பட வெற்றியைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

இதனிடையே தனது ரசிகர் மன்றம் சார்பில் உதவி கேட்ட ரசிகருக்கு அல்லு அர்ஜுன் தற்போது உதவியுள்ளார். சமூக வலைத்தளத்தில் அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் சார்பில், ரசிகர் ஒருவருக்கு அவரின் தந்தையின் நுரையீரல் நோய்க்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் நிதியுதவி தேவைப்படுவதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பதிவு குறித்து அல்லு அர்ஜுனுக்கு தெரிய வந்துள்ளது.

Advertisment

அந்த ரசிகரின் சூழலை அறிந்த அல்லு அர்ஜுன், அவருக்கு தேவையான நிதி உதவியை தனது குழுவினர் மூலம் செய்துள்ளார். இந்த உதவியைப் பெற்ற அந்த ரசிகர் அல்லு அர்ஜுனுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ந்துள்ளார்.

allu arjun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe