Advertisment

ஹாலிவுட்டில் இருந்து அல்லு அர்ஜுனுக்கு அழைப்பு ; வெளியான மாஸ் தகவல்

Allu Arjun has been offered a Hollywood film

அல்லு அர்ஜுன், 'புஷ்பா – தி ரைஸ்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'புஷ்பா – தி ரூல்' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. பூஜை விழாவில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தானா கலந்துகொள்ளவில்லை. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 'புஷ்பா – தி ரைஸ்' படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுனுக்கு படவாய்ப்புகள் குவிந்து வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

இந்நிலையில் அல்லு அர்ஜுனிடம் பிரபல ஹாலிவுட் இயக்குநர் கதை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் கலந்துகொண்டார் அல்லு அர்ஜுன். அப்போது சூப்பர் ஹீரோ படத்தை இயக்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவரும் அல்லு அர்ஜுனும் சந்திப்பு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சந்திப்பில் அந்த இயக்குநர், தான் இயக்கும் படம் குறித்து அல்லு அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

allu arjun hollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe