Advertisment

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அபராதம்

Allu Arjun fined violating traffic rules

Advertisment

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும்வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாககூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம்வாகனங்களின் முகப்பு மற்றும் பின்புற கண்ணாடிகள் 70 சதவிகிதம், பக்கவாட்டு கண்ணாடிகள் 40 சதவிகிதம் வெளிப்படைத்தன்மை கொண்டிருத்தல் அவசியம் என தீர்ப்பளித்திருந்தநிலையில் தற்போது அந்த விதிமுறையை நடிகர் அல்லு அர்ஜுன் மீறியுள்ளார்.ஹைதராபாத் சந்தை அருகே அல்லு அர்ஜுன் தனதுரேஞ்ச் ரோவர் சொகுசு காரின் கண்ணாடியில் கருப்பு நிற ஃபிலிம் ஒட்டி சென்றுள்ளார். இதை பார்த்த போக்குவரத்து காவல்துறையினர்700 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

pushpa allu arjun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe