Advertisment

முதல்வருடன் அல்லு அர்ஜுனின் தந்தை சந்திப்பு

allu arjun father allu aravind met tn cm stalin

அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், ஆஹா ஓடிடி தளத்தை தொடங்கி நடத்தி வருகிறார். தெலுங்கில் பிரபல ஓடிடி தளமாக அறியப்பட்ட ஆஹா தளம், தற்போது தமிழிலும் எண்ட்ரி கொடுத்துள்ளது.இதில் கவினின் 'ஆகாஷ்வாணி' திரைப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து சமுத்திரக்கனியின் 'ரைட்டர்' உள்ளிட்ட பல படங்கள்ஆஹா ஓடிடி வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில்ஆஹா நிறுவனர்கள் அல்லு அரவிந்த் மற்றும் ஜூ பல்லி ராமு ராவ் இருவரும் தமிழக முதல்வர்ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளனர். அப்போதுதமிழ்ப் புத்தாண்டை ஒட்டி நடைபெறவிருக்கும் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் மாபெரும் துவக்க விழாவில் விருந்தினராக வருமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு அல்லு அரவிந்த் மற்றும் ஜூ பல்லி ராமு ராவ் இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisment

allu arjun cm stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe