தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் பிரபல இயக்குனர் கொரட்டல சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூனை சந்திக்க ரசிகர் ஒருவர் 200 கிமீ நடந்தே வந்திருக்கும் சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குட்டூரை சேர்ந்த இளைஞர் மாச்சேர்லா தனக்கு பிடித்த ஹீரோவான அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக 200 கிமீ நடந்தே ஹைதரபாத் சென்றுள்ளார்.
இந்த செய்தியை அறிந்த நடிகர் அல்லு அர்ஜூன், தனது ரசிகரை வீட்டிற்கு அழைத்து வாழ்த்தியோடு, மரக்கன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.