பிரபல தெலுங்கு நடிகரான அல்லூ அர்ஜூன் நடனம், ஆக்‌ஷன் என அனைத்திலும் தனது தனி திறமையால் எக்கச்சக்கமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார். இவருக்கு தெலுங்கு திரையுலகை தாண்டி, மலையாளம் மற்றும் ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

Advertisment

allu arjun

தற்போது திரிவிக்ரம் படத்தில் நடித்து வருகிறார் அல்லூ அர்ஜூன். இதனையடுத்து மேலும் இரண்டு பெரிய இயக்குநர்களின் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் அல்லூ அர்ஜூன் மிக காஸ்ட்லியான ஒரு கேரவனை வாங்கியிருக்கிறார் என்று தெலுங்கு திரைப்பட துறையில் பேச்சுக்கள் கிளம்பின. அதை உறுதி செய்யும் வகையில் அல்லூ அர்ஜூன் அந்த கேரவனின் உள் புகைப்படம், வெளி புகைப்படம் என்று அனைத்தும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

சுமார் 3.5 கோடிக்கு ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ள இந்த கேரவனுக்கு ஃபால்கன் என்று பெயரிட்டுள்ளார் அல்லூ அர்ஜூன். மேலும் ஆங்கிலத்தில் ஏஏ என்று தன்னுடைய சிம்பிளை அதில் பதித்துள்ளார். ரூ 3.5 கோடிக்கு வாங்கிய இந்த கேரவனுக்கு மேலும் கூடுதலாக ரூ. 3.5 கோடியை டிசைனிற்காக செலவு செய்துள்ளார் அல்லூ அர்ஜூன்.

இந்நிலையில் மொஹமத் அப்துல் அசாம் என்ற நபர் ஹிமாயத் நகரில் அந்த் கேரவன் பார்க் செய்தபோது அதை போட்டோ எடுத்து, கருப்பு டிண்ட் ஒட்டப்பட்டிருக்கிறது என்று புகார் கொடுத்தார். இதனையடுத்து இந்த கேரவனில் கருப்பு டிண்ட் ஒட்டப்பட்டிருப்பதை உறுதிசெய்து, ரூ. 735 அபராதம் வழங்கியுள்ளனர் போலீஸார்.