Advertisment

"என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சி" - சமூக மாற்றத்திற்கான அல்லு அர்ஜுனின் புதிய பிரச்சாரம்!

allu arjun campaign against smoking

Advertisment

கரோனா காலத்தில் புகை பிடிப்பதன் தீமைகள் குறித்து பேசுவது மிகவும் முக்கியமான மற்றும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. புகை பிடிப்பவர்கள் கரோனாவால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதைப் பற்றி அல்லு அர்ஜுன் கூறுகையில், "புகை பிடிப்பதின் தீமைகளைக் குறித்து கவனத்தை ஈர்க்க விரும்பினேன். 90கள் காலகட்டத்தில் மேற்கத்தியக் கலாச்சாரத்தால் நாம் ஈர்க்கப்பட்டபோது தான் புகை பிடிக்கும் பழக்கம் அதிகமானது. அந்த காலத்தில் அது ஒரு பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்பட்டது.

தற்பொழுது 2021-ல் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியிலும் புகை பிடிக்கும் பழக்கம் உச்சத்தில் உள்ளது .

Advertisment

இதற்கு மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதை மாற்ற என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

கரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையாமல் இருப்பதாலும், மேலும், மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுவதாலும் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்புகிறேன். எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குப் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகளைக் குறித்து நான் எடுத்துரைத்து வருகிறேன். சிறிய அளவில் நாம் செய்யும் மாற்றம் கூட நம்மைச் சீரான மற்றும் ஆரோக்கியமான பாதைக்கு அழைத்துச் செல்லும் நான் நம்புகிறேன்," என்றார். மேலும், இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அவரது ரசிகர்கள் புகை பிடிக்கக் கூடாது எனவும் அல்லு அர்ஜுன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

pushpa allu arjun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe