allu arjun

அல்லு அர்ஜுன் நடிப்பில்த்ரிவிக்ரம் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் உலகம் முழுவதும் வெளியான படம்அலா வைகுந்தபுரமலோ. இந்தப்படத்தில்பூஜாஹெக்டே, தபு, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Advertisment

Advertisment

தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய இசையமைப்பாளராக கொடிகட்டி பறக்கும் எஸ்.தமன்இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் வெளியாக்குவதற்கு முன்பாகவே இப்படத்தின் பாடல்கள்ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்கள் மனதைக் கொள்ளைகொண்டது.

இதனைத்தொடர்ந்து இப்படத்தின் அனைத்துபாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. வெளியான அனைத்து ஸ்ட்ரீமிங் தளங்களையும் சேர்த்து,ஒரு பில்லியன் பேர் இப்பாடல்களைக் கேட்டிருப்பது சாதனையானது. தற்போது யூட்யூபில் மட்டுமே ஒரு பில்லியன் (100 கோடி)பேர் இந்தப் படத்தின்ஆடியோ மற்றும் வீடியோபாடல்களைப் பார்த்திருப்பது சாதனையாகியுள்ளது.