ஷாருக்கானுடன் அல்லு அர்ஜுன்? - அட்லீயின் திட்டம்

Allu Arjun to act cameo in Shah Rukh Khan atlee movie Jawan

ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'ஜவான்' படத்தில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க படக்குழு அவரை அணுகி வருவதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு முதல் பாலிவுட் படமாக இப்படம் அமையும். 'புஷ்பா 2' படத்தில் தற்போது நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இப்படத்தின் முதல் பாகமான 'புஷ்பா' படம் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான நிலையில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'பதான்' படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை ரூ.946 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

allu arjun atlee sharukh khan
இதையும் படியுங்கள்
Subscribe