Advertisment

கலைத்துறையில் அறிமுகமாகும் அல்லு குடும்பத்தின் 4வது தலைமுறை!

vsvdabsa

அல்லு குடும்பத்தின் 4வது தலைமுறையும் கலைத்துறையில் அறிமுகமாகிறது. அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அரா அர்ஜூன் நடிகையாக அறிமுகமாகிறார். ‘ஷகுந்தலம்’எனப் பெயரிடப்பட்டுள்ள புராண படத்தில் பாரத இளவரசியாக அல்லு அரா நடிக்கிறார். அண்மையில் அல்லு அர்ஜூனின் இளைய மகளான அரா, இளையராஜாவின் ’அஞ்சலி அஞ்சலி’ பாடலில் தோன்றி மக்கள் மத்தியில் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றார். தற்போது அவர் தனது நடிப்பை பெரிய திரைக்குக் கொண்டு சேர்க்க ஆயத்தமாகியிருக்கிறார்.

Advertisment

இதன் மூலம், இந்திய சினிமாவில் அல்லு குடும்பத்தின் நான்காவது தலைமுறையும் கால்பதித்துவிட்டது. அராவின் முதல் படத்தை குணசேகர் இயக்குகிறார். 4 வயதான அரா, சமந்தா அக்கினேனி, தேவ் மோகன் ஆகியோருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

Advertisment

gewgewgwe

சமந்தா சகுந்தலாவாகவும், தேவ் மோகன் புரு வம்ச அரசனான துஷ்யந்தாவாகவும் நடிக்கின்றனர். படத்தில் அதிதி பாலன், மோகன் பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். 'ஷகுந்தலம்' என்பது காளிதாசர் படைத்த காவியம். இதுகுறித்து அல்லு அர்ஜூன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அல்லு குடும்பத்தின் 4வது தலைமுறையும் திரையில் தடம் பதிக்கும் பெருமித தருணத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். 'ஷகுந்தலம்' படத்தில் அல்லு அரா நடிக்கிறார். குணசேகருக்கு நன்றி. என் மகளுக்கு இந்த அழகான திரைப்படத்தில் முதல் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த நீலிமா குணாவுக்கு நன்றி. அராவை திரையில் பார்க்கப்போவதில் மகிழ்ச்சி. ஒட்டுமொத்த 'ஷகுந்தலம்' குழுவுக்கு வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

allu arjun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe