Skip to main content

தெலங்கானா மாநில கலாச்சார விழாவிற்காக சிறப்பு பாடலை உருவாக்கிய ஏ.ஆர். ரஹ்மான் - கெளதம் மேனன்!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

Allipoola Vennela

 

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து, தெலங்கானாவின் கலாச்சார வண்ணத்திருவிழாவான பதுக்கம்மா விழாவுக்காக சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். தெலங்கானாவில் கொண்டாடப்படும் பதுக்கம்மா திருவிழாவானது, பெண்கள் பூக்களைக் கொண்டாடும் துள்ளலான மற்றும் வண்ணமயமான திருவிழாவாகும். இத்திருவிழா தெலங்கானாவின் கலாச்சார பெருமையை வெளிப்படுத்தும் அம்சமாக அனைவராலும் போற்றப்படுகிறது.

 

இதனைக் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ள இப்பாடலை எம்.எல்.சி. கே. கவிதா வழிநடத்தும் தெலங்கானா ஜக்ருதி என்ற அமைப்பு தயாரித்துள்ளது. மிட்டபள்ளி சுரேந்தர் பாடலை எழுதி, பாடியுள்ளார். நேற்று (05.10.2021) மாலை வெளியிடப்பட்ட இப்பாடல், தெலங்கானா மக்கள் மத்தியில் வெகுவாக கவனம் பெற்றுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்