ர்வெல் நிறுவனத்தின் பிரபல சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான ஸ்பைடர் மேன், உலகளவில் ரசிகர்களை ஈர்த்த ஒரு கதாபாத்திரம். இதுவரை 8 படங்கள் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள நிலையில் 9வது படமாக ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் சமீபத்தில் நடந்தது. அப்போது ஆக்ஷன் காட்சி எடுக்கப்பட நிலையில் ஸ்பைடர் மேனாக நடிக்கும் நாயகன் டாம் ஹாலண்ட் விபத்தில் சிக்கி காயமடைந்தார். பின்பு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். இப்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் அதில் அவர் கலந்து கொண்டுவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இதுவரை வெளியான ஸ்பைடர் மேன் படங்களில் அதிகம் வெளியிட்ட சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது இதுவரை வெளியான அனைத்து ஸ்பைடர் மேன், படங்களையும் இந்தியாவில் நவம்பர் மாதம் ரீ ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. முதல் கட்டமாக நவம்பர் 14ஆம் தேதி முதல், ஸ்பைடர் மேன்(2002), ஸ்பைடர் மேன் -2(2004 மற்றும் ஸ்பைடர் மேன்-3(2002) ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
அதை தொடர்ந்து நவம்பர் 21ஆம் தேதி முதல், ‘தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’(2012) மற்றும் ‘தி அமேஸிங் ஸ்பைடர் மேன் 2’(2014) படங்கள் வெளியாகவுள்ளது. அடுத்ததாக நவம்பர் 28ஆம் தேதி முதல், ‘ஸ்பைடர் மேன்: ஹோம்கமிங் (2017), ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் (2019) மற்றும் ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் (2021) ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. அதே போல் டிசம்பர் 5ஆம் தேதி முதல், ‘ஸ்பைடர் வெர்ஸ்; தி அனிமேட்டட் மல்டிவெர்ஸ்’ படம் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பால் ஸ்பைடர் மேன் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். ஒரே சமயத்தில் தங்களுக்கு பிடித்தமான அத்தனை ஸ்பைடர் மேன் படங்களையும் காண ஆர்வமாக உள்ளனர்.