Advertisment

‘அதில் அனைத்துமே பொய்யானது...’- ரைசா வில்சன்

கடந்த 2017ஆம் ஆண்டு முதன் முதலாக தமிழில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரைசா ஒரு போட்டியாளராக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகினார். பிக்பாஸுக்கு முன்னதாக ரைசா வில்சன் மாடலிங் துறையில் இருந்துள்ளார். அதன் பின் நடிகையாக வேண்டும் என்கிற எண்ணத்தோடு தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

Advertisment

all the details are completely wrong

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பியார் பிரேமா காதல் என்னும் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். ஹரிஷும் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்றவர். பியார் பிரேமா காதல் வெற்றியை அடுத்து ரைசா வில்சனுக்கு நடிக்க வாய்ப்பு குவிவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்த வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. தற்போது காதலிக்க நேரமில்லை, ஆலிஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில், ரைசா வில்சன் சமீபத்தில் தன்னை பற்றி விக்கிபீடியாவில் உள்ள தகவல் முற்றிலும் பொய் என்று ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டு தெரிவித்துள்ளார். விக்கிபீடியாவில்தான் பிரபலங்களை பற்றியான தகவல்களை தெரிந்துகொள்ள எளிதாக இருக்கும். பலரும் இதுதான் 100 சதவிதம் உண்மை என்றும் நினைக்கின்றனர். ஆனால், விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் தகவல்களை சேர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

big boss raisa willson
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe