Advertisment

7 கோடிக்கு கேரவன் வாங்கிய பிரபல நடிகர்...

பிரபல தெலுங்கு நடிகரான அல்லூ அர்ஜூன் நடனம், ஆக்‌ஷன் என அனைத்திலும் தனது தனி திறமையால் எக்கச்சக்கமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார். இவருக்கு தெலுங்கு திரையுலகை தாண்டி, மலையாளம் மற்றும் ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

Advertisment

allu arjun

தற்போது திரிவிக்ரம் படத்தில் நடித்து வருகிறார் அல்லூ அர்ஜூன். இதனையடுத்து மேலும் இரண்டு பெரிய இயக்குநர்களின் படத்தில் நடிக்கிறார்.

Advertisment

இந்நிலையில் அல்லூ அர்ஜூன் மிக காஸ்ட்லியான ஒரு கேரவனை வாங்கியிருக்கிறார் என்று தெலுங்கு திரைப்பட துறையில் பேச்சுக்கள் கிளம்பின. அதை உறுதி செய்ய்யும் வகையில் அல்லூ அர்ஜூன் அந்த கேரவனின் உள் புகைப்படம், வெளி புகைப்படம் என்று அனைத்தும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுமார் 3.5 கோடிக்கு ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ள இந்த கேரவனுக்கு ஃபால்கன் என்று பெயரிட்டுள்ளார் அல்லூ அர்ஜூன். மேலும் ஆங்கிலத்தில் ஏஏ என்று தன்னுடைய சிம்பிளை அதில் பதித்துள்ளார். ரூ 3.5 கோடிக்கு வாங்கிய இந்த கேரவனுக்கு மேலும் கூடுதலாக ரூ. 3.5 கோடியை டிசைனிற்காக செலவு செய்துள்ளார் அல்லூ அர்ஜூன்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளது, “என் வாழ்க்கையில் நான் பெரிதாக எதையாவது ஒன்றை வாங்கினால் . எனக்கு ஒன்றே ஒன்றுதான் என் நினைவில் தோன்றும். அது என்ன என்றால், ‘மக்களின் அன்பு. அந்த அன்புதான் என்னை இப்படி விலையுயர்ந்த பொருட்களை கூட வாங்க வைக்கிறது’ மிக்க நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

tolly wood allu arjun
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe