பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளராக வேதிகா பிரகாஷ் ஷெட்டி என்பவர் இருந்து வந்தார். இவர் உதவியாளராக இருந்த போது ரூ.77 லட்சம் மோசடி செய்துள்ளதாக ஆலியா பட்டின் தாயார் கடந்த பிப்ரவரி மாதம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதாவது ஆலியா பட்டிடமும் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலமும் ஆலியா பட்டின் கையெழுத்தை போலியாக போட்டு இரண்டு வருடங்களில் ரூ 76.9 லட்சம் வசூலித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து வேதிகா பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையும் தொடங்கியது. ஆனால் வேதிகா பிரகாஷ் தலைமறைவாகவே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு வேதிகா பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பின்பு நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்ட நிலையில் நாளை(10.07.2025) வரை காவல் நிலைய கஸ்டடியில் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

438

போலீஸார் தற்போது வேதிகா பிரகாஷின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஆலியா பட், எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் 2021ஆம் ஆண்டு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலியா பட் தற்போது ‘ஆல்ஃபா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து ‘லவ் & வார்’ என்ற படத்தில் அவரது கணவர் மற்றும் நடிகர் ஆலியா பட்டுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.