காதலனை கரம் பிடிக்கும் ஆலியா பட்; முடிவான திருமண தேதி

alia bhatt ranbir kapoor wedding april14

பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில் சமீபகாலமாக இவர்களதுதிருமணம் குறித்ததகவல்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வந்தனர். ஆனால் இது குறித்து எந்தவிதமானஅதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் ரன்பீர் கபூரின்இல்லத்தில் திருமண ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இவர்களதுதிருமணம் குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஆலியா பட்டின் உறவினர் ஒருவர் கூறுகையில்,ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் திருமணம் வரும் 14 ஆம் தேதி பஞ்சாபி முறைப்படி நடைபெற உள்ளதாகவும், 13 ஆம் தேதி மெஹந்தி விழாவுடன் தொடங்கும் இத்திருமண நிகழ்வு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆலியா பட் - ரன்பீர் கபூர்திருமணவிழாவிற்கு ஷாருக்கான், கரன் ஜோகர், சஞ்சய் லீலா பன்சாலி, வருண் தவான் உள்ளிட்ட ஒரு சில பிரபலங்களுக்கு மட்டுமேஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

alia bhatt ranbir kapoor
இதையும் படியுங்கள்
Subscribe