Advertisment

அனுமதியின்றி புகைப்படம் வெளியீடு - ஆலியா பட் ஆவேசம்; தொடர்பு கொண்ட போலீஸ்

Alia Bhatt photo issue

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஆலியா பட் தற்போது இந்தி மற்றும் ஹாலிவுட் படம் ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறார். மும்பையில் தனது வீட்டில் வசித்து வரும் ஆலியா, தான்வீட்டினுள் இருக்கும் போது யாரோ இரண்டு ஆண்கள் தன்னை அனுமதியின்றி புகைப்படம் எடுத்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மதியநேரத்தில் நான் எனது வீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது யாரோ என்னை கண்காணிப்பதாகத்தோன்றியது. உடனே நிமர்ந்து பார்க்கும் போது எனது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்துஇரண்டு ஆண்கள் என்னை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதுஎந்த உலகில் அனுமதிக்கப்படுகிறது? இது தனிநபர் மீதான அத்துமீறல். நீங்கள் கடக்க முடியாத ஒரு எல்லை உள்ளது.இன்று அனைத்து எல்லைகளும் கடந்துவிடப் படுகின்றன” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், மும்பை காவல்துறையினரையும் அந்தப் பதிவில்டேக் செய்திருந்தார்.

Advertisment

இந்த விவகாரத்தில் ஆலியா பட்டிற்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அனுஷ்கா ஷர்மா, "எங்கள் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று பலமுறை கேட்டுக்கொண்டோம். ஆனால், குழந்தையின்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்" எனப் பதிவிட்டிருந்தார். மேலும் அர்ஜுன் கபூர், கரண் ஜோஹர், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலரும் ஆலியா பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து மும்பை காவல்துறைநடிகை ஆலியா பட்டைதொடர்பு கொண்டுபுகைப்படம் வெளியிட்டது தொடர்பாக புகார் அளிக்கும்படி கேட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தனது குழு தொடர்பில் இருப்பதாக ஆலியா பட் பதிலளித்துள்ளார்.

MUMBAI POLICE alia bhatt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe