alia bhatt  explain rrr movie and rajamouli rumours

Advertisment

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம், கடந்த 25ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வசூல் ரீதியாகவும் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

ராம் சரணின் காதலியாக சீதா கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்பு பட ரிலீஸ் வரைக்கும் இருந்தது. ஆனால், ஆலியா பட் தொடர்பான காட்சிகள் சொற்ப நிமிடங்கள் மட்டுமே படத்தில் இடம்பெற்றுள்ளன. இதை ஆலியா பட்டே எதிர்பார்க்கவில்லையாம். இதனால் இயக்குநர் ராஜமௌலி மீது அதிருப்தி அடைந்த ஆலியா பட், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஆர்.ஆர்.ஆர். படம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கியதோடு, ராஜமௌலியையும் அன் ஃபாலோ செய்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில் நடிகை ஆலியா பட் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "ஆர்.ஆர்.ஆர் படக்குழு மீது அதிருப்தியில் இருப்பதால், படம் தொடர்பான புகைப்படங்களைநான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டதாகபரவிய தகவலைஅறிந்தேன்.தற்செயலாக நடக்கும் நிகழ்வுகளை அனுமானத்தின் பேரில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். சீரற்ற முறையில் இருக்கும் எனது இன்ஸ்டாகிராம் பதிவுகளை அடிக்கடி சீர் அமைத்து கொண்டிருப்பேன். ஆர்.ஆர்.ஆர் படம் போன்றபிரம்மாண்ட படங்களில் நானும் நடித்துள்ளேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். ராஜமௌலி இயக்கும் முறை எனக்கு பிடித்திருந்தது. பல ஆண்டுகளாக தங்களது முயற்சிகள் மற்றும் முழு உழைப்பையும் கொடுத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை படக்குழு உருவாக்கியுள்ளனர். இதனால் படம் தொடர்பாக நான் கூறியதாக வெளிவரும் செய்திகளை மறுக்கிறேன்" எனக்குறிப்பிட்டுள்ளார்.