Advertisment

அனிமல் பட விமர்சனம் - ராஷ்மிகா குறித்து ஆலியா பட்

alia bhatt about rashmika mandana in animal movie

அர்ஜூன் ரெட்டி, கபிர் சிங் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள படம் ‘அனிமல்’. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தன்னா, அனில் கபூர், பாபி தியோல், சக்தி கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 4 பேர் தயாரித்துள்ளனர். 8 பேர் இசையமைத்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் நேற்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில் நடிகையும்ரன்பீர் கபூரின் மனைவியுமான ஆலியா பட் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி போட்டுள்ள அவர், “சந்தீப் ரெட்டி வங்கா, உங்களை போல் யாரும் இல்லை. இந்தப் படத்தில் வருபவை அதிர்ச்சியூட்டுகிறது,ஆச்சரியப்பட வைக்கிறது. கூஸ்பம்ஸாகவும் இருக்கிறது. ராஷ்மிகா மந்தனா, படத்தில் மிக அழகாகவும் நேர்மையாகவும் இருக்கிறீர்கள். அந்த காட்சியில் உங்களை நான் ரசித்தேன். ரொம்ப ஸ்பெஷலாகவும் இன்ஸ்பைரிங்காகவும் இருந்தது” என குறிப்பிட்டு படக்குழுவை பாராட்டினார்.

Advertisment

alia bhatt ranbir kapoor rashmika mandana
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe