Advertisment

வலியில் ஆலியா... சோகத்தில் ரசிகர்கள்!

alibatt

ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் தற்போது அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர் ஆகியோருடன் பிரமஸ்த்ரா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது. இதில் ஒரு காட்சியில் அலியாபட் வில்லன்களுடன் ஆவேசமாக மோதுவது போன்ற அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. அப்போது அவர் அந்த காட்சியில் நடித்து கொண்டிருக்கும் போது உயரத்தில் இருந்து திடீரென்று கீழே விழுந்தார். இதில் அவரது வலது தோள்பட்டையிலும் கையிலும் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. பின் உடனடியாக அலியா பட்டை படக்குழுவினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து சிகிச்சைக்கு பிறகு ஆலியா பட்டை சில வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். மேலும் ஆலியாபட் கடும் வலியால் அவதிப்படுகிறார் என்றும் 15 நாட்கள் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் கூறியதால் அவரை மும்பைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். இதனால் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

Advertisment
alibatt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe