style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
'சீமராஜா' படத்தை முடித்த கையேடு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கும் சைன்ஸ் பிக்சன் படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். மேலும் கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர் பானுப்ரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, அலெக்சா எல்.எஃப் என்ற கேமராவை இப்படத்திற்காக பயன்படுத்தி வருவதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">