Advertisment

வெப் சீரிஸாக உருவாகும் பிரபல பத்திரிக்கையாளரின் கொலை வழக்கு

AL Vijay as showrunner in the madras murder web series

தமிழ் சினிமாவில் 'கிரீடம்' படத்தின் மூலம் அறிமுகமாகி 'மதராசப்பட்டினம்', 'தெய்வத்திருமகள்', 'தலைவா' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் ஏ.எல் விஜய். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான 'தலைவி' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனை தொடர்ந்து 'சித்திரை செவ்வானம்' படத்தை எழுதி தயாரித்திருந்தார். நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் ஏ.எல் விஜய் அடுத்ததாக பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் வெப் சீரிஸில் ஷோ-ரன்னராக பணியாற்றவுள்ளார். இந்த வெப் சீரிஸ் 1940-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் நடந்த உண்மை சம்பவம், பிரபல பத்திரிகையாளர் லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கை மையப்படுத்தி 'தி மெட்ராஸ் மர்டர்' என்ற தலைப்பில் உருவாகவுள்ளது. சூர்யா பிரதாப் எழுதி இயக்கவுள்ள இந்த சீரிஸ் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Advertisment

al vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe