Advertisment

விஜய்க்கு இரண்டாவது திருமணம் 

mr.chandramouli

al vijay

அஜித்தின் கிரீடம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் ஏ.எல்.விஜய் அடுத்தடுத்து விக்ரம், விஜய், ஆர்யா, ஜெயம் ரவி, பிரபு தேவா ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி பிரபலமானார். இதற்கிடையே நடிகை அமலாபாலை காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான இரண்டு வருடங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர்.இந்நிலையில் இயக்குனர் விஜய்க்கு 2வது திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்தனர். இருந்தும் இத்தனை நாட்களாக திருமணத்திற்கு மறுத்து வந்த இயக்குனர் விஜய் தற்போது சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் அவருக்கு 2வது திருமணம் நடக்க உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடிகை அமலாபாலை பிரிந்தது குறித்து இயக்குனர் விஜய் மனம் திறந்து பேசியபோது.... "நம்பிக்கை, நேர்மை இல்லாமல் வாழ்வதில் பயன் இல்லை. எங்கள் பிரிவுக்கு இதுவே காரணம். இயல்பாகவே சமுதாயத்தின் மீதும் பெண்கள் மீதும் அதிக அக்கறை கொண்டவன் நான். எனது இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெண்களின் சுயமரியாதையை பிரதிபலித்தன" என்றார்.

Advertisment

alvijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe