Advertisment

அப்பாவானார் இயக்குனர் ஏ.எல்.விஜய்!

al vijay

Advertisment

அஜித் நடித்த 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். பிரபல தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகனான இவர் இயக்குனர் ப்ரியதர்ஷனிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர்.

‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’, ‘வனமகன்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். விக்ரமுடன் இணைந்து இவர் இயக்கிய 'தெய்வத்திருமகள்' படத்திற்காக பல விருதுகளைக் குவித்த விஜய்க்கு அதனுடன் தமிழக அரசின் விருதுகளும்கிடைத்தது. இந்தப் படத்தில் நடித்த அமலா பாலை விஜய் காதலிக்க, 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, 2016ஆம் ஆண்டு பிரிந்தனர்.

இதன்பின் சினிமாவில் படம் இயக்குவதில் கவனம் செலுத்திவந்த இயக்குனர் விஜய், வீட்டாரின் வேண்டுகோளுக்கு இணங்க மருத்துவர் ஐஸ்வர்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் விஜய் - ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

al vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe