/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/104_22.jpg)
ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மிஷன் சாப்டர் 1- அச்சம் என்பது இல்லையே'. லைகா தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ அண்மையில் வெளியானது. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படம் குறித்து ஏ.எல். விஜய் கூறுகையில், "இந்த படம் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் பரப்பளவில் இப்படத்திற்காக செட் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். நீங்கள் ட்ரைலரில் பார்க்கும் ஜெயில் முழுவதும் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டது. ஆனால் படம் பார்க்கும் பொழுது அது செட் என்ற உணர்வை தராது. அந்த அளவு நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அருண் விஜய் மிகவும் மெனக்கெட்டு இப்படத்தில் நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் அவர் காலில் தசைநார் கிழிந்தது கூட பெரிதாக காட்டிக் கொள்ளாமல் மிகவும் அர்ப்பணிப்பாக நடித்துக் கொடுத்தார்.
இப்படத்திற்கு முதன் முதலில் நாங்கள் அச்சம் என்பது இல்லையே என்று தான்தலைப்பை வைத்தோம். ஆனால் லைகா நிறுவனம் இப்படத்தினுள் வந்த பிறகு இப்படத்தை ஒரு பான் இந்தியா படமாக வெளியிட முடிவு செய்தோம். அப்பொழுது மற்ற மொழிகளுக்கு நன்கு பரிச்சயப்படும் வகையில் இப்படத்திற்கு மிஷன் என்று பெயர் வைத்தோம். அனைத்து மொழிகளுக்கும் ஏற்றார் போல் டைட்டில் அமைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் மழையால் செட் அமைப்புகள் இரண்டு முறை நாசமானது அதன் பிறகு மீண்டும் செட் அமைத்து இப்படப்பிடிப்பை நடத்தினோம்.
நடுவில் நாயகி எமி ஜாக்சன் கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொண்டார். இந்த மாதிரியான காரணங்களால் இப்படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமானது. மற்றபடி தற்போது படம் நல்லபடியாக நிறைவடைந்து இருக்கிறது. இது ஒரு ஆக்ஷன் கலந்த சென்டிமென்ட் திரைப்படம். நான் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கதைக்களத்தை தேர்வு செய்து பல பரிட்சார்த்த முயற்சிகளை எடுப்பேன். இதன் காரணமாக இப்படத்தை ஆக்ஷன் திரைப்படமாக கொடுத்துள்ளேன். அதேபோல் முதன்முறையாக வெளிக்கதையை வாங்கி இப்படத்தை எடுத்து இருக்கிறேன். ஒரு சில இடைவெளிக்குப் பிறகு ஜி.வி. பிரகாஷ் உடன் கைகோர்த்து இருக்கிறேன். மிகச் சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கிறார். இந்த படம் நிச்சயமாக உங்களுக்கு பிடித்தமான படமாக இருக்கும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)