/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bellbottom-akshay-kumar.jpg)
இந்தியாவின் முன்னணி நடிகரான அக்ஷய்குமார் வரிசையாக ஒன்பது படங்களுக்கு மேல் நடித்து வந்தார். இந்த ஊரடங்கு சமயத்தில் அவரது இரண்டு படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, அதில் 'லக்ஷ்மி பாம்' என்னும் படம் மட்டும் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. 'சூர்யவன்ஷி' படம் தீபாவளி பண்டிகையின்போது திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனிடையே 'பெல்பாட்டம்' என்றொரு படத்தில் நடிப்பது குறித்து அறிவிப்பு வெளியானது. தற்போது ஊரடங்கால் இப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகுவதாக இருந்த இப்படம் ஊரடங்கு காரணத்தால் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் பாலிவுட் பட்டாளமே நடிக்கும் இப்படத்தை ரஞ்சித் திவார் இயக்குகிறார். கரோனா அச்சுறுத்தல் இருக்கும் நிலையிலும் இப்படத்தின் ஷூட்டிங்கை உரிய பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது படக்குழு. லண்டனில் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளனர். கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் வீடியோவை தற்போதுவெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் பாதுகாப்பாக நடைபெறும் ஷூட்டிங் 20 நாட்களை நெருங்கிய நிலையில், படத்தின் செட்டிலிருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளது படக்குழு. படத்திற்கு பெல்பாட்டம் என்று பெயரிட்டதுபோல 80 களின் ரெட்ரோ லுக்கில் இருக்கிறது செட் மற்றும் அக்ஷய் குமாரின் ட்ரெஸ்ஸிங்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)