Advertisment

அக்‌ஷய் குமார் - டைகர் ஷெராஃப்பின் 'படே மியன் சோட்டே மியன்' 

Akshay, Tiger, Prithviraj starring Bade Miyan Chote Miyan upd

பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்'படே மியன் சோட்டே மியன்'.இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், சோனாக்ஷி சின்கா மற்றும் மனுஷி சில்லர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஷால் மிஷ்ரா இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் படே மியன் சோட்டே மியன் இடையிலான தோழமை மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறது.

Advertisment

இப்படம் குறித்து அக்ஷய் குமார் கூறுகையில், "ஆக்ஷன், காமெடி கலந்த கதையில் உண்மையான சண்டைகள் இப்படத்தை என் மனதுக்கு நெருக்கமான உணர்வை கொடுக்கிறது. இப்படத்தில் நான் முன்பைவிட அதிக திறமையை வெளிப்படுத்த முயற்சித்து இருக்கிறேன். அருமையான படக்குழு உடன் இணைந்து உண்மையான சண்டைக் காட்சிகளில் நடித்ததை என் வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன். இப்படத்தில் பணியாற்றியதை சிறப்பாக கருதுகிறோம். இதேபோன்று இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும்." என்றார்.

akshay kumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe